search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நிலமோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்த இரண்டு பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை
    X

    கோப்பு படம்

    நிலமோசடி வழக்கில் கேரளாவை சேர்ந்த இரண்டு பேருக்கு தலா 14 ஆண்டுகள் சிறை

    • நிலமோசடி வழக்கு திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
    • மோசடி செய்தவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    திண்டுக்கல்:

    பழனியில் நிலமோசடி யில் ஈடுபட்டதாக 25 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட வழக்கில் கேரளாவைச்சேர்ந்த 2 முதியவர்களுக்கு தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் தீர்ப்பளித்து ள்ளது. கன்னியாக்குமரி மாவட்டம் தக்கலைப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரகுமார். இவருக்கு சொந்தமான 38 செண்ட் நிலம் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்துள்ளது.

    அந்த நிலத்தை கேரள மாநிலம் வைக்கம் பகுதியை ச்சேர்ந்த பாலகோபாலன் நாயர் (வயது 60) மற்றும் கோட்டயம் அடுத்துள்ள புதுப்பள்ளியைச் சேர்ந்த தங்கச்சன் (76) ஆகிய இருவரும் கூட்டு சேர்ந்து கடந்த 1997-ஆம் ஆண்டு மோசடி செய்துள்ளனர்.

    ராஜேந்திரகுமாருக்கு சொந்தமான நிலத்தை பாலகோபாலன் நாயர் பவர் பத்திரம் மூலம் தங்கச்சனுக்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.

    இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட குற்ற பிரிவில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து பாலகோபா லன் நாயர் மற்றும் தங்கச்சன் ஆகியோரை கைது செய்த னர்.

    இதுதொடர்பான வழக்கு திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. சுமார் 25 ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கில் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் மோகனா நேற்று தீர்ப்பு வழங்கினார்.

    4 பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் நிருபிக்க ப்பட்ட நிலையில் பால கோபாலன் நாயர் மற்றும் தங்கச்சன் ஆகிய இருவரு க்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனயும், தலா 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    வெவ்வெரு பிரிவுகளுக்கு மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கிய போதிலும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என உத்தர விட்டுள்ளதால் இருவரு க்கும் தலா 3 ஆண்டுகள் சிறைதண்டணையாக குறைந்துள்ளது. பின்னர் அவர்கள் இருவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட னர்.

    Next Story
    ×