லாரி மோதி 2 பேர் சாவு

அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவித மாக மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.
லாரி மோதி 2 பேர் சாவு
Published on

தருமபுரி,

தருமபுரி மாவட்டம், அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் இறைவன். இவரது மகன் சூர்யா என்கிற எட்வட் (வயது23). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 9 மாத குழந்தை உள்ளது.

இந்த நிலையில் எட்வட் அரூர்-மோபிரிப்பட்டி சாலையில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று வழக்கம் போல் ஓட்டல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவு எட்வட் வேலையை முடித்து விட்டு தனது நண்பர் தளித்சேட்டு மகன் அம்பேத்கர் செல்வன் (18) பிளஸ்-2 மாணவன் என்பவருடன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து கொண்டி ருந்தார்.

அப்போது அரூர் பேருந்து நிலையம் அருகில் வந்த போது சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்பகுதியில் இருசக்கர வாகனம் எதிர்பாராதவித மாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே எட்வட், அம்பேத்கர் ஆகிய 2 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விபத்தில் பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனை க்காக அரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கிய லாரி-இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்தி போக்கு வரத்தை சீரமைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com