தேனி மாவட்டத்தில் 2 பேர் தற்கொலை

தேனி மாவட்டத்தில் குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே டி.சுப்புலாபுரத்தைச் சேர்ந்தவர் சின்னமாடசாமி. (வயது 32). இவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதால் மனைவி கோபித்துக் கொண்டு குழந்தைகளுடன் அவரது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சின்னமாடசாமி விஷம் குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கம்பம் குரங்கு மாயன் தெருவைச் சேர்ந்தவர் தெய்வேந்திரன் (43). மாற்றுத் திறனாளியான இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் மன உளைச்சலில் இருந்த தெய்வேந்திரன் வீட்டில் தூக்கில் தொங்கினார்.

அவரை மீட்டு பரிசோதனை செய்தபோது உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com