தேனி அருகே குடும்ப பிரச்சினையில் 2 பேர் தற்கொலை

குடும்ப பிரச்சினையில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி பெருமாள் கோவில் தெற்குதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(48). ஆக்டிங் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கடந்த வருடம் கணையம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

மேலும் அவரது அம்மா கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த மோகன்ராஜ் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி வடக்குஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி(41). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இதனால் மனமுடைந்த பால்பாண்டி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com