கூடலூர் அருகே துக்க நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபருக்கு கத்திக்குத்து 2 பேர் கைது

துக்கநிகழ்வில மது அருந்திய போது வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் மோதிக்கொண்டனர்.இதில் கத்தியால் குத்தியதில் ஒருவர் படுகாயமடைந்தார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

கூடலூர்:

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கருநாக்கமுத்தன்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கடந்த 2 நாட்களுக்குமுன்பு உயிரிழந்தார். இந்த துக்கநிகழ்வில் கலந்து கொள்வதற்காக மூதாட்டியின் உறவினர்கள் அவரது வீட்டில் ஒன்றுகூடினர்.

அப்போது தயாளன் என்பவரது வீட்டில் ஜெயபாண்டி, அவரது உறவினர்கள் தெய்வேந்திரன், சிலம்பரசன் ஆகியோர் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவர்கள் மோதிக்கொண்டனர்.

இதில் ஆத்திரமடைந்த தெய்வேந்திரன் ஜெயபாண்டியை கத்தியால் குத்தினார். ரத்தவெள்ளத்தில் படுகாயத்துடன் சரிந்த ஜெயபாண்டியை கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதுகுறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்து தெய்ேவந்திரன், சிலம்பரசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com