புவனகிரியில் மது பாட்டில் விற்ற 2 பேர் கைது

புவனகிரியில் மது பாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புவனகிரியில் மது பாட்டில் விற்ற 2 பேர் கைது
Published on

கடலூர்:

புவனகிரி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எடப்பாளையம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த அம்சாயால் (வயது 50), குரியமங்கலம் டாஸ்மாக் கடை அருகே புவனகிரி ஆதிபராநத்தம் பழனிவேல் (43) இவர்கள் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com