திண்டிவனத்தில் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேர் கைது

போலீசார் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர். இருசக்கர வாகனத்தில் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
லாட்டரி டிக்கெட் விற்று கைது செய்யப்பட்ட  2 பேர் .
லாட்டரி டிக்கெட் விற்று கைது செய்யப்பட்ட  2 பேர் .
Published on

விழுப்புரம்:

திண்டிவனம் பகுதியில் தொடர்ந்து லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. இதை யடுத்து திண்டிவனம் ஏ.எஸ். பி. அபிஷேக் குப்தா உத்தரவின் படி, திண்டிவனம் சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்த ராசன் தலைமையிலான போலீசார் திண்டிவனம் மேம்பாலம் கீழ் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்பொழுது இருசக்கர வாகனத்தில் லாட்டரி டிக்கெட் விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் கிடங்கல் 2 பகுதியைச் சேர்ந்த அப்பு ராஜ் (வயது 32), ரோசனை பகுதியைச் சேர்ந்த செந்தில் குமார் (27) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த லாட்டரி சீட்டு, ஆன்லைன் லாட்டரிக்காக பயன்படுத்திய மொபைல் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com