வீட்டின் வாசலில் நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்

இரவு 12 மணியளவில் இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவித்தனர்.தீ பற்றியதில் இரண்டு இருசக்கர வாகனமும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.
வீட்டின் வாசலில் நிறுத்தி இருந்த 2 மோட்டார் சைக்கிள் எரிந்து நாசம்
Published on

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகரில் உள்ள ஏவி குளத்தெரு பகுதியை சேர்ந்தவர் முஹம்மது ரபிக்.

இவரது மனைவி நஸ்ரத் பீவி. இவருக்கு சொந்தமான வீடு அப்பகுதியில் உள்ளது.

அந்த வீட்டின் கீழ்த்தளத்தை வாடகை விட்டுவிட்டு, மேல் தளத்தில் இவர் வசித்து வந்தார்.

இவருடைய மகளும், மகனும் பயன்படுத்தும் 2 மோட்டார் சைக்கிகளை கீழ்வீட்டின் முன் பகுதியில் நிறுத்தி இருப்பது வழக்கம். அதேபோன்று நேற்று இரவு நிறுத்திவிட்டு தூங்க சென்றனர்.

திடீரென்று கீழ் வீட்டில் இருப்பவர்கள் இரவு 12 மணியளவில் வாசலில் நிறுத்தியுள்ள தங்களுடைய இரண்டு இருசக்கர வாகனமும் தீப்பற்றி எரிவதாக தகவல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அவர்கள் கீழே வந்து வாகனத்தின் மீது தண்ணீர் விட்டு தீயை அணைத்தனர்.

தீ பற்றியதில் இரண்டு இருசக்கர வாகன மும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்து நசரத் பீவி பட்டுக்கோட்டை நகர போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்மமான முறையில் எரிந்த இரண்டு சக்கர வாகனங்களில் எவ்வாறு தீ பற்றியது, வேறு யாரும் திட்டமிட்டு சதி செயலில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com