கோவையில் தடுப்புசுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி

2 பேரும் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்திற்கு சென்றனர். 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கோவையில் தடுப்புசுவர் மீது மோட்டார் சைக்கிள் மோதி 2 பேர் பலி
Published on

கவுண்டம்பாளையம்,

கோவை ஜோதிபுரத்தை சேர்ந்தவர் ரோகித்(வயது25). தச்சர் தொழிலாளர். வீரபாண்டி சக்தி நகரை சேர்ந்தவர் அருளானந்தம்(27).

இவர்கள் 2 பேரும் நண்பர்கள். இன்று அதிகாலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையத்திற்கு சென்றனர்.

பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை ரோகித் ஒட்டி வந்தார்.

மோட்டார் சைக்கிள் சின்னமத்தம்பாளையம் பகுதியில் வந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஒடியது.

சிறிது நேரத்தில் சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும், அருகே இருந்த கம்பியில் விழுந்ததால் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com