போடியில் 2 கல்லூரி மாணவிகள் மாயம்

போடியில் மாயமான 2 கல்லூரி மாணவிகளை போலீசார் தேடி வருகின்றனர்
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

மேலசொக்கநாதபுரம்:

போடி சுப்புராஜ்நகர் புதுக்காலனியைச் சேர்ந்தவர் பாலசேகர் மகள் யாழினி (வயது 20). இவரது தாய் தந்தை இல்லாத நிலையில் சகோதரர் சுந்தரவடிவேல் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

போடியில் உள்ள கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற யாழினி இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரவடிவேல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தார். எங்கும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து  மாணவியை தேடி வருகின்றனர்.

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் முத்து மகள் பாண்டீஸ்வரி (20). இவர் தாமரைகுளத்தில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற பாண்டீஸ்வரி மாயமானார். இது குறித்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com