வளுதூக்கும் போட்டியில் 19 பதக்கங்களை வென்ற வீரர்- வீராங்கனைகள்

ஆலங்குளத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 பதக்கங்களை வென்றனர். 59 கிலோ எடை பிரிவில் அப்துர் ரகுமான் இரண்டு தங்கம் வென்றார்.
மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் கலெக்டரிடம் வாழ்த்து பெற்றனர்.
Published on

தென்காசி:

ஆலங்குளத்தில் நடைபெற்ற தென்காசி மாவட்ட அளவிலான வளு தூக்கும் போட்டியில் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டு 19 பதக்கங்களை வென்றனர். இதில் ஊட்டச்சத்து நிபுணர் பிரியதர்ஷினி சீனியர் பெண்கள் பிரிவில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்துடன் ஸ்ட்ராங் வுமன் பட்டத்தையும் வென்றார். 59 கிலோ எடை பிரிவில் அப்துர் ரகுமான் இரண்டு தங்கம் வென்றார். 83 கிலோ எடை பிரிவில் தங்க மணிகண்டன் இரண்டு தங்கம் வென்றார்.

66 கிலோ மாஸ்டர் 2 எடை பிரிவில் சுப்ரமணியன் இரண்டு தங்கம் வென்றார். 93 கிலோ மாஸ்டர் 3 எடை பிரிவில் மனசாட்சி ராஜேந்திரன், ஜூனியர் பிரிவில் முகமது லால், சீனியர் பிரிவில் கோச் ராம்சங்கர் இரண்டு தங்கப்பதக்கம் வென்றனர். அதே பிரிவில் ஹரிஹர சுப்ரமணியன் இரண்டு வெண்கலப்பதக்கம் வென்றார். 105 கிலோ எடை பிரிவில் முத்துராஜா தங்கம் மற்றும் வெள்ளி பதக்கம் வென்றார். 120 கிலோ எடைப்பிரிவில் செந்தில் ஆறுமுகம் இரண்டு தங்கம் வென்றார். வெற்றி பெற்ற வீரர்கள் அடுத்த மாதம் மாநில அளவில் நடக்க இருக்கும் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு மாவட்ட அளவில் வளு தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள் அனைவரும் தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com