திருவாரூர் பகுதிகளில் 18-ந்தேதி மின்தடை

பராமரிப்பு பணிகள் நடைெபறுவதால் நாளை மறுநாள் மின் விநியோகம் இருக்காது.காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருவாரூர் பகுதிகளில் 18-ந்தேதி மின்தடை
Published on

திருவாரூர்:-

திருவாரூர் மின்வாரிய இயக்குதல், பராமரித்தல் உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவாரூர் துணை மின் நிலையத்தில் வருகிற 18-ந் தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையம் மற்றும் கப்பல் நகர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் திருவாரூர் நகர், தெற்குவீதி, பனகல் சாலை, விஜயபுரம்,

தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயந்தாங்குடி, மாவூர் மற்றும் அடியக்கமங்கலம், துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் அடியக்கமங்கலம் , இ.பி.காலனி, சிதம்பரம் நகர், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பாம்புலியூர், புதுப்பத்தூர், நீலப்பாடி, கீழ்வேளூர், கொரடாச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 18-ந் தேதி காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com