17 வயது சிறுமி மாயம்

தருமபுரி அருகே 17 வயது மாயம் ஆனார்.போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
17 வயது சிறுமி மாயம்
Published on

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகேயுள்ள தொப்பூர் பகுதியை சேர்ந்தவர் 17 சிறுமி . கடந்த 27ந்தேதி இரவு அவரது வீட்டில் குடும்பத்தினருடன் படுத்து உறங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மணியளவில் அவரது தாய் எழுந்து மகளை பார்த்த போது காணவில்லை.

பல இடங்களில் அவரை தேடியும் அவர் எங்கே போனார் என்று தெரியவில்லை. உறவினர்கள் வீடுகளில் தேடியும் அவர் எங்கே போனார் என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில் தொப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com