விக்கிரவாண்டி அருகே பிரிசர் பாக்சில் இருந்து மின்சாரம் தாக்கி 15 பெண்கள் மயக்கம்

அஞ்சலி செலுத்த பிரிசர் பாக்ஸில் வீட்டில் வைத்தனர்.ஊராட்சி தலைவர் 15-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.
விக்கிரவாண்டி அருகே பிரிசர் பாக்சில் இருந்து மின்சாரம் தாக்கி  15 பெண்கள் மயக்கம்
Published on

விழுப்புரம்:

விக்கிரவாண்டி அடுத்த ஆவுடையார்பட்டு அம்பேத்கர் தெருவை சேர்ந்த குமரன் என்பவரது மகள் கயல்விழி (வயது 17). பிளஸ் 2 மாணவியான இவர் தேர்வுக்கு சரியாக படிக்கவில்லை என அம்மா சரளா திட்டியதால் வீட்டில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு, அஞ்சலி செலுத்த பிரிசர் பாக்ஸில் வீட்டில் வைத்தனர். இத்தகவல் அறிந்த அந்த கிராம மக்கள் ஓரே நேரத்தில் துக்க வீட்டிற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பிரிசர் பாக்ஸிலிருந்து மின்சாரம் தாக்கி ஆவுடையார்பட்டு ஊராட்சி தலைவர் 15-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர்.

இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் 4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 3 பேர் விக்கிரவாண்டி அரசு மருத்துவ மனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர் .இது பற்றி தகவலறி்ந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அந்த கிராமத்தில் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com