

சென்னை:
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி நிலவரப்படி ஒட்டு மொத்தமாக பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1,306 இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
283 இடங்களில் அதிமுகவும், 465 இடங்களில் மற்றவர்களும் வெற்றி பெற்றுள்ளனர்.