

சேலம்:
சேலம் பட்டர் பிளை மேம்பாலம் அருகே நேற்றிரவு 10 மணியளவில் 15 வயது மதிக்கதக்க சிறுமி ஒருவர் தனியாக சுற்றி திரிந்தார்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த அங்கு நின்ற லாரி டிரைவர்கள் கொண்டலாம்பட்டி போலீசாருக்கு உடனே தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியை பிடித்து விசாரித்தனர். அப்போது தனது தாய் இறந்து விட்டதாகவும், தந்தை 2 -வது திருமணம் செய்து கொண்டதால் தனது சித்தி கொடுமை படுத்துவதாகவும், இதனால் அங்கிருந்து தப்பி வந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து மாணவியை மீட்ட ேபாலிசார் அவரை சேலத்தில் உள்ள ஒரு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.