ரெட்டிசாவடி அருகே வெடி விபத்து நடந்த பகுதியில் 1½ மூட்டை வெடி பறிமுதல்

ரெட்டிசாவடி அருகே வெடி விபத்து நடந்த பகுதியில் 1½ மூட்டை வெடி பறிமுதல் செய்யப்பட்டது.இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
ரெட்டிசாவடி அருகே வெடி விபத்து நடந்த பகுதியில் 1½ மூட்டை வெடி பறிமுதல்
Published on

கடலூர்:

ரெட்டிச்சாவடி அடுத்த சிவனார் புரத்தில் மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகருக்கு, அந்த பகுதியில் ஒரு வீட்டில் அனுமதி இன்றி பட்டாசு வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வெள்ளை கண்ணு என்பவர் வீட்டிற்கு சென்று பிரபாகர் சோதனை செய்த போது, அரசு அனுமதி இன்றி நாட்டு வெடி 1½ மூட்டை இருந்தது தெரிய வந்தது.  மேலும் இந்த நாட்டு வெடி சமீபத்தில் சிவனார்புரத்தில் பட்டாசு வெடிவிபத்தில் கைது செய்யப்பட்ட அரியாங்குப்பம் மணவெளி சேர்ந்த கோசலா மற்றும் சேகர் ஆகியோர் தயாரிக்கும் இடத்திலிருந்து கொண்டு வந்து வெள்ளைகண்ணு வீட்டில் வைத்திருந்தது தெரிய வந்தது.

இதே போல் முத்தம்மாள் என்பவர் வீட்டிலும் ஒரு மூட்டை காக்கி வெடி வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து வெடி வைத்திருந்த மூட்டைகளை கிராம நிர்வாக அலுவலர் பிரபாகர் பறிமுதல் செய்து, ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வெள்ளை கண்ணு, முத்தம்மாள், கோசலா, சேகர் ஆகியோர் மீது தனித்தனியாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com