ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரிடம் ரூ. 34 ஆயிரம் அபேஸ்

ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாககூறி ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரிடம் ரூ. 34 ஆயிரம் அபேஸ் செய்யப்பட்டது. உதவுவது போல் நடித்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரிடம் ரூ. 34 ஆயிரம் அபேஸ்
Published on

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பழைய பால்பண்ணை தெருவை சேர்ந்தவர் கேசவன்(வயது62). ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவரான இவர் தாதம்பட்டி மந்தையில் உள்ள ஏ.டி.எம்.மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார்.

அப்போது அங்கு வந்த ஒரு வாலிபரிடம் பணம் எடுத்துதருமாறு கூறினார். அதற்கு அந்த வாலிபர், கேசவனிடம் அவரது ஏ.டி.எம்.கார்டை வாங்கி கொண்டு ஏ.டி.எம்.மையத்திற்குள் சென்றார். சிறிது நேரம் கழித்து வெளியே வந்த அவர், பணம் வரவில்லை என்று கூறி, வேறொரு ஏ.டி.எம். கார்டை கேசவனிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.

அதனை கவனிக்காமல் கேசவன் தனது வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் பாஸ் புத்தகத்தை எடுத்துக்கொண்டு வங்கிக்கு பணம் எடுப்பதற்காக சென்றார். அப்போது பாஸ் புத்தகத்தை பதிவு செய்தபோது, வங்கி கணக்கில் இருந்து ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி ரூ.34 ஆயிரத்து 481 எடுக்கப்பட்டது தெரியவந்தது.

பணம் எடுத்து தருவதாக ஏ.டி.எம்.கார்டை வாங்கி சென்ற வாலிபர், தன்னுடைய கணக்கில் இருந்து பணத்தை எடுத்திருப்பதை அறிந்த கேசவன் அதிர்ச்சி அடைந்தார். அதுபற்றி அவர்

வாடிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா, சப்-இன்ஸ்பெக்டர் (பயிற்சி) மாயாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கேசவனின் வங்கி கணக்கில் இருந்து நைசாக பணத்தை எடுத்து கொண்டு தப்பிய வாலிபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com