தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவு நகர வங்கி சேவை ஆயத்த பணிகள்-மேலாண்மை இயக்குனர் ஆய்வு

கூட்டுறவு நகர வங்கி சேவையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவைக்கு இணையாக சேவையை செய்ய ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது.ஆய்வில் மண்டல இணைப்பதிவாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Thoothukudi, Co-operative Bank, Service,
Thoothukudi, Co-operative Bank, Service,
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகர வங்கி சேவையை தேசியமயமாக்கப்பட்ட வங்கி சேவைக்கு இணையாக சேவையை செய்ய ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அப்பணி முன்னேற்றம் குறித்து கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் நகர வங்கி அலுவலர்களின் பணியினை தமிழ்நாடு மாநில நகர கூட்டுறவு வங்கி இணையத்தின் கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குனருமான சிவமலர் ஆய்வு செய்தார்.

இதில் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் முத்துக்குமாரசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், செயலாட்சியர் சிவகாமி, கூட்டுறவுத்துறை அலுவலர்கள் மற்றும் நகர வங்கி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com