எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பயிலும் மாணவ -மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்

திண்டுக்கல் அருகே எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பயிலும் மாணவ -மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வினியோகம் செய்யப்பட்டது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

திண்டுக்கல்:

தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பயிலும் மாணவர்களின் நலன்கருதி பாடப்புத்தகங்களை முன்கூட்டியே வழங்க அரசு உத்தரவிட்டது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை எஸ்.எஸ்.எல்.சி. பயிலும் 27 ஆயிரத்து 126 பேர், பிளஸ்-2 பயிலும் 20 ஆயிரத்து 326 பேர் என மொத்தம் 47 ஆயிரத்து 452 மாணவ-மாணவிகள் உள்ளனர். இவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஏற்கனவே வரவழைக்கப்பட்டன.

இதையடுத்து நேற்று பள்ளிகளில் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தொடங்கியது. இதையொட்டி மாணவ-மாணவிகள் நேற்று காலை பள்ளிக்கு வந்தனர். அப்போது மாணவ-மாணவிகள் அனைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். முன்னதாக அவர்களுக்கு கைகளை சுத்தம் செய்வதற்காக கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டது. மேலும் பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வரிசையில் நிற்க வைத்து பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. மேலும் வீட்டிலேயே அமர்ந்து பாடங்களை சரியாக படிக்கும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com