வில்லியனூரில் மனைவியுடன் தகராறு-தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

வில்லியனூரில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுச்சேரி:

வில்லியனூர் புதுநகரை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 33). கட்டிட தொழிலாளி. இவர், தனது மனைவி மனோரஞ்சிதம் மற்றும் 2 மகன்களுடன் மூலகுளத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

அய்யப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் அவர் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார்.

கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு இதனை மனோரஞ்சிதம் கண்டித்தார். அய்யப்பன் மனைவியுடன் தகராறு செய்து விட்டு கோபித்துக்கொண்டு வில்லியனூர் புதுநகரில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் மனைவியுடன் கோபித்துக்கொண்டு வந்ததால் மனவேதனை அடைந்த அய்யப்பன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

நேற்று காலை அவர் தனது தாய் வீட்டில் யாரும் இல்லாத போது மின் விசிறி கொக்கியில் தாவணியால் தூக்குபோட்டு தொங்கினார்.

உடனே இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அய்யப்பனை தூக்கில் இருந்து மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அய்யப்பன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com