பேட்டையில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது

நெல்லை பேட்டையில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்திய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
பேட்டையில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திக்குத்து தொழிலாளி கைது
Published on

நெல்லை:

நெல்லை பழைய பேட்டை வாணியர் தெற்கு தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது25). இவருக்கும் பழையபேட்டை கன்னிவிநாயகர் கோவில் தெருவை சேர்ந்த கண்ணன்(45) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துவந்தது. சம்பவத்தன்று இது தொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

அப்போது ஆத்திரம் அடைந்த கண்ணன் கோவிந்தனை சரமாரியாக கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் கோவிந்தன் காயம் அடைந்தார். உடனே அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

இதுபற்றி பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து கண்ணனை கைது செய்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com