முசிறியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திகுத்து

முசிறியில் முன்விரோத தகராறில் வாலிபரை கத்தியால் குத்தி விட்டு 2 பேர் தப்பி சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முசிறியில் முன்விரோதத்தில் வாலிபருக்கு கத்திகுத்து
Published on

முசிறி:

திருச்சி மாவட்டம் முசிறி குடிகாரதெருவை சேர்ந்தவர் ஆனஸ்ட்ராஜ் (வயது 25). இவருக்கும் அதே பகுதி ஏவூர் மேலதெருவை சேர்ந்த முருகானந்தம் மற்றும் தாஸ் (25) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முசிறி அய்யம்பாளையம் கடைவீதியில் ஆனஸ்ட்ராஜ் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த முருகானந்தம் மற்றும் தாஸ் ஆகிய 2 பேரும் ஆனஸ்ட்ராஜிடம் தகராறு செய்தனர். பின்னர் கத்தியால் அவரை குத்தி விட்டு தப்பியோடி விட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் முசிறி போலீசார் விரைந்து சென்று ஆனஸ்ட்ராஜை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முசிறி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.  

X

Maalai Malar
www.maalaimalar.com