

புதுடெல்லி:
இந்தியாவில் உள்ள துறவிகளின் தலைமை பீடமாக கருதப்படும் அகில இந்திய அகாரா பரிஷத் என்ற அமைப்பின் பிரதிநிதிகள் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கடந்த 10ம் தேதி நடந்தது. கூட்ட முடிவில் இந்தியாவில் உள்ள முக்கிய போலி சாமியார்கள் 14 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் அஷ்ராம் பாபு, குர்மீத் ராம் ரஹீம் சிங், ஓம் பாபா, நிர்மல் பாபா போன்ற பிரபல சாமியார்களின் பெயர்கள் இடம்பிடித்திருந்தன.
இந்த நிலையில் இது குறித்து டுவிட்டரில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக் விஜய் சிங் கூறியதாவது:
போலி சாமியார்கள் பட்டியலில் பாபா ராம் தேவ் பெயர் இல்லாதது பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. போலி பொருட்களை விற்பதன் மூலம் நாட்டு மக்களை அவர் ஏமாற்றி வருகிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.