80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு இனி தபால் ஓட்டு - மாற்று திறனாளிகளுக்கும் சலுகை

மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் இனி தபால் ஓட்டு போடுகிற வகையில் 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
தபால் ஓட்டு
தபால் ஓட்டு
Published on

புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமையை நமது நாடு பெற்றுள்ளது. நமது நாட்டில் ஒவ்வொரு தேர்தலின்போதும், கூடுதல் எண்ணிக்கையிலான வாக்காளர்களை வாக்குச்சாவடிக்கு வர வைத்து ஓட்டு போட வைப்பதில் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது.

அந்த வகையில் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களும் சரி, மாற்றுத்திறனாளிகளும் சரி வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஜனநாயக கடமையை செய்வது என்பது அபூர்வமான நிகழ்வாகி வருகிறது. ஏனெனில் அவர்கள் தங்களது இருப்பிடங்களில் இருந்து வாக்குச்சாவடிக்கு வந்து சேர்வது என்பதே கடினமான ஒன்றாக அமைகிறது. ஆனால் அவர்களையும் ஓட்டு போட வைக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது.

அந்த வகையில் அவர்களுக்கு தபால் ஓட்டு போடும் உரிமை வழங்கப்படுகிறது.

தற்போது பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்களுக்கும்தான் தபால் ஓட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் ஓட்டு போட அனுமதிக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன், மத்திய சட்ட அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

அந்த பரிந்துரை ஏற்கப்பட்டு விட்டது.

அதன் அடிப்படையில் மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் இனி தபால் ஓட்டு போடுகிற வகையில் 1961-ம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இனி இவர்கள் தபால் ஓட்டு போடலாம்.

80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 13-ஏ படிவத்தில் தேர்தல் அதிகாரி சான்றளிப்பார். அதன் பேரில் அவர்களுக்கு தபால் ஓட்டு போடலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com