விக்கிரவாண்டி வாக்குசாவடியில் புகுந்து இயக்குனர் கவுதமன் வாக்குவாதம்

விக்கிரவாண்டி வாக்குசாவடியில் புகுந்து இயக்குனர் கவுதமன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்கு சாவடிக்குள் புகுந்து இயக்குனர் கவுதமன் அங்கிருந்த பூத் ஏஜெண்டுகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
வாக்கு சாவடிக்குள் புகுந்து இயக்குனர் கவுதமன் அங்கிருந்த பூத் ஏஜெண்டுகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
Published on

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது. விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் 233 வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருந்தனர்.

மதியம் 12 மணியளவில் தமிழ்பேரரசு கட்சி சார்பில் போட்டியிடும் இயக்குனர் கவுதமன் அந்த பூத்துக்கு வந்தார். பின்னர் அவர் பூத்துக்குள் சென்றார். அங்கு அ.தி.மு.க. - தி.மு.க. சார்பில் ஏஜெண்டுகள் இருந்தனர்.

அங்கு அதிகமாக ஏஜெண்டுகள் இருந்ததால் அவர்களிடம் வாக்குவாதம் செய்தார். இதைபற்றி தகவல் அறிந்ததும் வெளியில் நின்ற போலீசார் உள்ளே சென்று வாக்குவாதம் செய்த இயக்குனர் கவுதமை வெளியே அழைத்து வந்தனர்.

அதன் பின்னர் இயக்குனர் கவுதமன் நிருபர்களிடம் கூறியதாவது: -

ஆளும் அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் 50 ஆண்டு காலமாக வைத்துள்ள பணத்தை கொண்டு தேர்தல் நடத்துகிறார்கள். அக்கிரமம் அதிகம் நடக்கிறது. ஒவ்வொரு பூத்திலும் ஒவ்வொரு கட்சி சார்பில் 1 ஏஜெண்ட்டு இருப்பது வழக்கம்.

ஆனால் இங்கு அ.தி.மு.க., தி.மு.க. சார்பில் 6-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு காவல் துறை உதவியாக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com