இந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குநராக கே. நடராஜன் பொறுப்பேற்றார்

ராஜேந்திர சிங் பணி ஓய்வு பெற்றதை தொடர்ந்து இந்திய கடலோர காவல் படை இயக்குநராக கே. நடராஜன் இன்று பொறுப்பேற்றார்.
இந்திய கடலோர காவல் படை இயக்குநர் கே நடராஜன்
இந்திய கடலோர காவல் படை இயக்குநர் கே நடராஜன்
Published on

புதுடெல்லி:

இந்திய கடலோர காவல் படை இயக்குநராக கே. நடராஜனை நியமித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நியமனங்களுக்கான அமைச்சரவை குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு மண்டல கடலோர காவல் படை துணைத்தலைவராக இருந்த கே.நடராஜனுக்கு பதவி உயர்வு அளித்து, கடலோர காவல் படை இயக்குநராக நியமிக்கப்பட்டார். இவருக்கு முன்னதாக இந்த பதவியை வகித்த ராஜேந்திர சிங் இன்று பணி ஓய்வு பெற்றார்.

இதைதொடர்ந்து, இந்திய கடலோர காவல் படை இயக்குநராக கே. நடராஜன் பொறுப்பேற்றார்.  இந்த பொறுப்பில் முதன்முறையாக ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

X

Maalai Malar
www.maalaimalar.com