மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
Published on

மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும், வேலை நேரத்தை உயர்த்தக்கூடாது, கொரோனாவால் உயிரிழந்த மின்வாரிய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திண்டுக்கல் மீனாட்சிநாயக்கன்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சி.ஐ.டி.யு. திட்ட செயலாளர் உமாபதி தலைமையில், சம்மேளன திட்ட பொருளாளர் சுந்தரராஜன், மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு செயலாளர் நல்லக்கண்ணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com