திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

திண்டுக்கல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

குள்ளனம்பட்டி:

மதுரை அருகே கரிசல்குளத்தை சேர்ந்தவர் பழனி. இவர் திண்டுக்கல் கொட்டபட்டி அருகே தனியார் நிறுவன பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவி யுவராணி (வயது 53) .நேற்று இவர் திண்டுக்கல்லில் உள்ள அவரது நிறுவனத்திற்கு வருவதற்காக மதுரையிலிருந்து பஸ் மூலம் திண்டுக்கல் நோக்கி வந்து பழனி பைபாஸ் சாலையில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து கொட்டபட்டி சாலையில் உள்ள அவரது நிறுவனத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரைப் பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 10 பவுன் நகையை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த யுவராணி கூச்சல் போட்டார் அக்கம்பக்கத்தினர் வருவதற்குள் மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் யுவராணி புகார் கொடுத்தார். அதன்பேரில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் . மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம் சப்இன்ஸ்பெக்டர்கள் இளஞ்செழியன், வேல்முருகன், அழகுபாண்டி தலைமையிலான போலீசார் நகையை பறித்து தப்பியோடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com