திண்டுக்கல் அருகே சொத்துக்காக மகனை வெட்டி சாய்த்த தந்தை

திண்டுக்கல் அருகே சொத்து தகராறில் மகனை வெட்டி சாய்த்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் அருகே சொத்துக்காக மகனை வெட்டி சாய்த்த தந்தை
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகில் உள்ள கோணப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமிராஜன். இவருக்கு சத்தியமூர்த்தி (வயது40), கணேசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சத்தியமூர்த்திக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். கணேசனுக்கு திருமணம் ஆகவில்லை.

சத்தியமூர்த்தி அடிக்கடி தனது தந்தையிடம் பூர்வீகசொத்தை தனது பெயருக்கு எழுதி தரும்படி தகராறு செய்து வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி அடிதடி ஏற்பட்டுள்ளது.

இன்று காலை கோணப்பட்டி அருகே சாமிராஜன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த சத்தியமூர்த்தி வழக்கம்போல் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டார்.

மேலும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த சாமிராஜன் தனது மகன் என்றும் பாராமல் அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதனை பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சத்தியமூர்த்தியை அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரிவாளால் வெட்டிய சாமிராஜன் சாணார்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்ட பகலில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள பகுதியில் மகனையே தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com