திண்டுக்கல் அருகே தனியார் பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி

திண்டுக்கல் அருகே தனியார் பஸ் மோதி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #accident
திண்டுக்கல் அருகே தனியார் பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி
Published on

குள்ளனம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தவமணி மகன் சீனிவாசன் (வயது20). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். மேலும் ராணுவத்தில் சேருவதற்காகவும் பயிற்சி எடுத்து வந்தார். அஞ்சுகுழிபட்டியில் தனது உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று நத்தம் சாலையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த தனியார் பள்ளி பஸ் அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த அவர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து சாணார்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரான கொசவப்பட்டியை சேர்ந்த ஜான்போஸ்கோ (35) என்பவரை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com