திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பெயிண்டர் பலி

திண்டுக்கல் அருகே அதிக போதையில் அசுர வேகத்தில் சென்றதால் விபத்தில் பெயிண்டர் பலியானார்.
திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் பெயிண்டர் பலி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள முத்தனம்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகரன் மகன் சடையாண்டி (வயது 29). அதே பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (26), திருப்பதி (39), சக்திவேல் (22) ஆகிய 4 பேரும் அங்குள்ள தனியார் கல்லூரியில் பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை வேலை முடிந்து சம்பளம் வாங்கிக் கொண்டு 4 பேரும் வீட்டுக்கு வரும் வழியில் ரெட்டியார்சத்திரம் டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தினர். போதையில் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்த போது இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றை ஒன்று முந்திச் செல்ல முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி 4 பேரும் கீழே விழுந்தனர். இதில் சடையாண்டிக்கு தலையில் பலத்தஅடிபட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ரெட்டியார் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து பைக்கை ஓட்டி வந்த சக்திவேலை தேடி வருகின்றனர். பைக்கில் வந்த மற்ற 2 பேரும் லேசான காயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com