திண்டுக்கல் அருகே அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

திண்டுக்கல் அருகே அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே அரசு பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே உள்ள பழையசெம்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மகன் சடையாண்டி (வயது 23). ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு திருமணமாகி ஜோதிலெட்சுமி என்ற மனைவியும் ஜீவானந்தம் என்ற மகனும், கோகிலா என்ற மகளும் உள்ளனர்.

நேற்று இரவு சித்தையன் கோட்டையில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் வந்து கொண்டு இருந்தார். செம்பட்டி - வத்தலக்குண்டு ரோட்டில் வந்து கொண்டு இருந்த போது எதிரே வந்த அரசு பஸ் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com