திண்டுக்கல் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி

திண்டுக்கல் அருகே நடந்த வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
Published on

வடமதுரை:

ஒட்டன்சத்திரம் அருகே கோதையெறும்பை சேர்ந்தவர் முனியப்பன் (வயது21). மில் தொழிலாளி. வடமதுரை அருகே கொல்லப்பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் கல்லூரி எதிரே சாலையோர பாலத்தில் தூங்கினார்.

அவ்வழியே வந்த வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம் தொட்டியம் கீழக்கரைகாடு பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (28). திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அய்யலூர் புத்தாநத்தம் பிரிவு அருகே சென்றபோது அவ்வழியே வந்த வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com