திண்டுக்கல் பகுதியில் பட்டம் விடுவதால் மின்தடை ஏற்பட்டால் கடும் நடவடிக்கை- அதிகாரி எச்சரிக்கை

திண்டுக்கல் பகுதியில் பட்டம் விட்டு மின்தடை ஏற்பட்டால் பட்டம் விட்டவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
பட்டம் விடுவதால் மின்தடை ஏற்பட்டால் கடும் நடவடிக்கை
பட்டம் விடுவதால் மின்தடை ஏற்பட்டால் கடும் நடவடிக்கை
Published on

திண்டுக்கல்:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் சமூக பரவல் மூலம் கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே வர வேண்டும், என அரசு மக்களை கேட்டு கொண்டுள்ளது.

வீடுகளில் குடும்பத்துடன் பொழுதை கழிப்பவர்கள் ஒன்றாக கூடுவதை தவிர்த்து சமூக இடைவெளியுடன் மாலை நேரத்தில் வீட்டு மொட்டை மாடியில் பட்டம் விட்டு பொழுதை கழிக்கின்றனர். இவ்வாறு பட்டங்கள் விடும்போது அவை மின்கம்பிகளில் சிக்கி விபத்தை ஏற்படுத்துகின்றன.

இதை தொடர்ந்து பாதுகாப்பாக பட்டம் விட அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டம் விட்டு மின் விபத்து நேரிட்டல் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திண்டுக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வினோதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:‍-

பொதுமக்கள் தங்கள் வீட்டு மொட்டை மாடிகள், உயரமான கட்டிடங்களில் இருந்து விடப்படும் பட்டங்கள் அறுந்து அப்பகுதியில் உள்ள மின் கம்பிகளில் சிக்கி மின் விநியோகம் தடைபடுவதுடன், விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மின்தடையால் மின் சாதனங்கள் பழுதாவதோடு அதனை சரிசெய்ய காலதாமதமாகிறது. எனவே பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாதுகப்பு குறித்த அறிவுரைகளை வழங்கி பட்டங்கள் விடுவதை தவிர்த்து சீரான மின்விநியோகத்துக்கும், மின் விபத்துகளை தடுக்கவும் ஒத்துழைக்கவேண்டும்.

பட்டம் விட்டு மின்தடை ஏற்பட்டால் பட்டம் விட்டவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com