டெங்கு தடுப்பு நடவடிக்கை: திண்டுக்கல்லில் 5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திண்டுக்கல் நகரில் கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தண்ணீர் தொட்டி வைத்திருந்த 5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
டெங்கு தடுப்பு நடவடிக்கை: திண்டுக்கல்லில் 5 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதார பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பழைய தொட்டிகளில் புழுக்கள் உற்பத்தியாகும் நிலையில் தண்ணீர் வைத்திருந்தால் அந்த தண்ணீரை தொட்டி அபராதம் விதித்து வருகின்றனர்.

பல இடங்களில் தண்ணீரை கீழே கொட்டி, தொட்டியையும் உடைத்து விடுகின்றனர். இதனால் அலுவலர்களுக்கும், பொதுமக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. திண்டுக்கல் குறிஞ்சிநகர், ரெங்கநாயகி நகர் ஆகிய பகுதிகளில் இன்று சுகாதார அலுவலர்கள் சென்ற போது பொதுமக்கள் அவர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வில்லை.

அதனையும் மீறி அனைத்து இடங்களிலும் தண்ணீர் தொட்டிகளை சோதனை நடத்தி புழுக்கள் உள்ளதா? என்று ஆய்வு செய்தனர். சுகாதார மற்ற நிலையில் இருந்த வீடுகளுக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 5 வீடுகளில் குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதே போல் ஓட்டல், வணிக நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. லாட்ஜ், தங்கும் விடுதிகள், பள்ளிகளிலும் இது போன்ற சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com