திண்டுக்கல் லாட்ஜில் கள்ளக்காதலியை கொன்று காதலன் தற்கொலை

திண்டுக்கல் லாட்ஜில் கள்ளக்காதலியை கழுத்து அறுத்து கொன்று காதலன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் லாட்ஜில் கள்ளக்காதலியை கொன்று காதலன் தற்கொலை
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே நிலக்கோட்டை கொங்கர்குளத்தை சேர்ந்தவர் பிரசாந்த்(வயது27). தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அதேபகுதியை சேர்ந்த நாகராஜ் மனைவி பாலாம்பிகா(25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பிரசாந்துக்கும் பாலாம்பிகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த விசயம் தெரியவரவே ஊர்பெரியவர்கள் இருவரையும் கண்டித்து அறிவுரை வழங்கினர். இருந்தபோதும் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் சந்தித்து வந்ததுள்ளனர்.

கடந்த 10-ந்தேதி வீட்டைவிட்டு வெளியேறிய ஜோடி திண்டுக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள லாட்ஜில் அறைஎடுத்து தங்கியுள்ளனர். இருவரும் அங்கே உல்லாசம் அனுபவித்துள்ளனர். அதன்பின்பு பிரசாந்துக்கும், பாலாம்பிகாவுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது கள்ளக்காதலியை கழுத்தை அறுத்து கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி பிரசாந்த் தான் வைத்திருந்த கத்தியால் காதலி பாலாம்பிகா கழுத்தை ஆட்டை அறுப்பதுபோல் அறுத்தார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பிணமானார்.

பின்னர் அதிர்ச்சியுடன் எப்படியும் தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்று கருதிய பிரசாந்த் தற்கொலை செய்ய முடிவு செய்தார். அதன்படி ஏற்கனவே வாங்கிவந்த வி‌ஷத்தை குடித்து தற்கொலை செய்தார்.

அறைக்கதவு கடந்த 2 நாட்களாக பூட்டியே கிடந்ததால் ஊழியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே விடுதி ஊழியர்கள் அறை கதவு தட்டியும் திறக்கப்படவில்லை.

எனவே திண்டுக்கல் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அறைகதவை உடைத்து உள்ளே சென்றனர்.

அப்போது படுக்கையில் வாயில் நுரைதள்ளியபடி பிரசாந்த் இறந்துகிடந்துள்ளார். பாலாம்பிகா கழிவறையில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

சம்பவ இடத்திற்கு மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com