திண்டுக்கல் வந்த வெளிமாநில திராட்சை கிலோ ரூ.100-க்கு விற்பனை

வெளிமாநில பச்சை திராட்சை திண்டுக்கல்லில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் வந்த வெளிமாநில திராட்சை கிலோ ரூ.100-க்கு விற்பனை
Published on

திண்டுக்கல்:

தேனி அருகே கூடலூர் பகுதியில் கருப்பு திராட்சைகள் அதிக அளவில் விளைவிக்கப்பட்டு வருகிறது. மேலும் திண்டுக்கல் அருகே உள்ள கிராமங்களில் இருந்து திராட்சை, வாழைப்பழம் உள்ளிட்டவை நகர் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது வறட்சியின் காரணமாக தமிழகத்தில் திராட்சை சாகுபடி குறைந்துள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து திராட்சை இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது நகரின் பல பகுதிகளில் திராட்சை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.100-க்கு பச்சை திராட்சை விற்கின்றனர். இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com