திண்டுக்கல் கலெக்டர் அலுவலக அதிகாரிக்கு சரமாரி வெட்டு

திண்டுக்கல் அருகே கலெக்டர் அலுவலக அதிகாரியை தாக்கி அரிவாளால் வெட்டிய உறவினர்கள் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
அரிவாள் வெட்டு
அரிவாள் வெட்டு
Published on

வடமதுரை:

திண்டுக்கல் அருகே உள்ள செங்குறிச்சி திருமலைக் கேணியைச் சேர்ந்தவர் சக்திவேல் (வயது 35). இவர் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு துரைராஜ் என்பவரின் மகள் கஸ்தூரியுடன் திருமணம் நடைபெற்றது. கஸ்தூரி தனது உறவினர்களுடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இதனை சக்திவேல் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே கஸ்தூரி தனது அக்கா வீட்டில் கடந்த 1 வருடமாக வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று சக்திவேல் வீட்டுக்கு வந்த மைத்துனர் சக்திவேல், பாரதி, பாலசுப்பிரமணி, மாமனார் துரைராஜ், மாமியார் பாப்பா, கரிசல் பட்டியைச் சேர்ந்தஅஞ்சலை ஆகியோர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினர். மேலும் சக்திவேலை அரிவாளால் தலையில் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். 

படுகாயமடைந்த சக்திவேல் சத்தம் போடவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்துள்ளனர். இதனால் அந்த கும்பல் தப்பி ஓடி விட்டனர். படுகாயமடைந்த சக்திவேல் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சப்-இன்ஸ்பெக்டர் ராஜா கணேஷ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com