பஸ் கட்டண குறைப்பு கண்துடைப்பு நடவடிக்கை: தினகரன் பேட்டி

பஸ்கட்டணம் குறைப்பு கண்துடைப்பு நடவடிக்கை என்று தஞ்சையில் டி.டி.வி. தினகரன் எம்.எல்.ஏ. குற்றம் சாட்டினார். #BusFareHike
பஸ் கட்டண குறைப்பு கண்துடைப்பு நடவடிக்கை: தினகரன் பேட்டி
Published on

கும்பகோணம்:

தஞ்சையில் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளிததார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு பஸ்கட்டணத்தை தற்போது குறைந்துள்ளது. இது ஒரு கண்துடைப்பு நடவடிக்கை. இதில் கவுரவம் பார்க்காமல், மக்கள் நலன் கருதி பஸ் கட்டண உயர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். அவ்வாறு ரத்து செய்தால் தான் பொதுமக்களுக்கு நல்லது.

என்னை வரவேற்று வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களை வேண்டுமானால் அகற்றலாம். மக்களை என்னிடம் இருந்து பிரிக்க முடியாது. ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் விரக்தியில் பேசுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #BusFareHike #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com