டிவில்லியர்ஸ் இடத்தை நிரப்புவது கடினம் - முன்னாள் வீரர் பேரி ரிச்சர்ட்ஸ் கருத்து

சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டிவில்லியர்ஸ் இடத்தை நிரப்புவது கடினம் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் பேரிரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். #ABDevilliers
டிவில்லியர்ஸ் இடத்தை நிரப்புவது கடினம் - முன்னாள் வீரர் பேரி ரிச்சர்ட்ஸ் கருத்து
Published on

கேப்டவுன்:

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த உலகின் சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸ் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார். அவரது இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மைதானத்தின் அனைத்து புற்றுகளிலும் (360 டிகிரி) பந்துகளை அடித்து ஆடும் 34 வயதான டிவில்லியர்ஸ் பல்வேறு உலக சாதனைக்கு சொந்தக்காரர். ஒரு நாள் போட்டியில் அதிவேக அரை சதம் (16 பந்து), விரைவான சதம் (31 பந்து), அதிவேகத்தில் 150 ரன் (64 பந்து) ஆகிய 3 சாதனைகளை படைத்துள்ளார்.

டிவில்லியர்சின் ஓய்வு முன்னாள், இந்நாள் வீரர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது இடத்தை நிரப்புவது கடினம் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் பேட்ஸ்மேன் பேரிரிச்சர்ட்ஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

டிவில்லியர்சின் ஓய்வு தென் ஆப்பிரிக்காவுக்கு மட்டுமல்ல உலக கிரிக்கெட்டுக்கே இழப்பாகும். இந்த விளையாட்டின் தூதுவர் ஆவார். டிவில்லியர்ஸ் இடத்தை நிரப்புவது மிகவும் கடினமானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com