டெல்லியில் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 8.36 குறைப்பு: அரவிந்த் கெஜ்ரிவால்

டீசல் மீது 30 சதவீதம் வாட் வரி வசூலித்து வந்துள்ள நிலையில், அதை 16.75 ஆக குறைக்க மந்திரி சபையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவால்
Published on

கொரோனா காலத்தில் நிதி நெருக்கடியை சமாளிக்க ஒவ்வொரு மாநிலங்களும் டீசல் மற்றும் பெட்ரோல் மீதான வாட் வரியை அதிக அளவில் உயர்த்தின. டெல்லி அரசும் அதற்கு விதிவிலக்கல்ல.

இந்நிலையில் டீசல் மீதான வாட் வரியை 30 சதவீதத்தில் இருந்து 16.75 சதவீதமாக குறைக்க மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதனால் டெல்லியில் டீசல் விலை 82 ரூபாயில் இருந்து 73.64 ரூபாயாக குறைக்கப்படுகிறது. ஒரு லிட்டருக்கு 8.36 ரூபாய் குறைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com