பாலத்தில் இருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி பலி

பாலத்தில் படுத்து இருந்த கட்டிட தொழிலாளி தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

நத்தம்:

செங்குறிச்சி புதுப்பட்டியை சேர்ந்தவர் தாண்டுமுனி (வயது 46). கட்டிடத்தொழிலாளி. இவர் நத்தம் அடுத்துள்ள செந்துறை பிரிவு பாலத்தில் இரவு படுத்து இருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்தார். 

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜமுரளி வழக்குப்பதிவு செய்து, அவரது உடலை கைப்பற்றி நத்தம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தாண்டுமுனி எதற்காக பாலத்தில் வந்து படுத்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com