கூடுதல் வரதட்சணை தராததால் மனைவியை விரட்டி விட்டு 2-ம் திருமணம் செய்த வாலிபர்

கூடுதல் வரதட்சணை தராததால் மனைவியை விரட்டிவிட்டு 2-ம் திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கூடுதல் வரதட்சணை தராததால் மனைவியை விரட்டி விட்டு 2-ம் திருமணம் செய்த வாலிபர்
Published on

மதுரை:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் தெய்வேந்திரன் (வயது 34). இவருக்கும், பழனியைச் சேர்ந்த நம்புதிரி (33) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் தெய்வேந்திரன் சங்கம்பட்டியைச் சேர்ந்த ராணி (27) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார்.

இதனை தட்டிக்கேட்ட நம்புதிரியை கூடுதல் வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து அடித்து விரட்டியதாக தெரிகிறது.

இது குறித்து நம்புதிரி உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து தெய்வேந்திரனை கைது செய்தார். மேலும் அவருக்கு உதவியாக இருந்த அவரது தந்தை பெரியசாமி, தாயார் காசியம்மாள் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com