டெஸ்டில் ஆடுவதுபோல் பேட் செய்யும்படி டோனி அறிவுரை கூறினார்: புவனேஸ்வர் குமார்

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதுபோல் உங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று டோனி அறிவுரை கூறினார் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.
டெஸ்டில் ஆடுவதுபோல் பேட் செய்யும்படி டோனி அறிவுரை கூறினார்: புவனேஸ்வர் குமார்
Published on

8-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜோடி சேர்ந்த புவனேஸ்வர் குமார் சிறப்பாக விளையாடினார். இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்தனர். புவனேஸ்வர் குமார் 53 ரன்னும், டோனி 45 ரன்னும் எடுத்தனர். புவனேஸ்வர் குமார் 9-வது விக்கெட்டாக களமிறங்கி அரைசதம் அடித்து சாதனைப் படைத்தார்.

சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த டோனியின் அறிவுரையே முக்கிய காரணம் என்று புவனேஸ்வர் குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து புவனேஸ்வர் குமார் கூறுகையில் ‘‘நான் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது, டோனி என்னிடம் வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள். டெஸ்ட் போட்டியில் நீங்கள் எப்படி விளையாடுவீர்களோ அப்படி விளையாடுங்கள். இன்னும் ஏராளமான ஓவர்கள் உள்ளன. அதனால் நெருக்கடிக்குள்ளாக வேண்டாம் என்று கூறினார். அவர்களை சமாளித்துவிட்டால் எங்களால் கட்டாயம் சேஸிங் செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும்.

ஏற்கனவே 7 விக்கெட்டுக்கள் இழந்த நிலையில் இழப்பதற்கு ஏதும் இல்லை என்பது எனக்குத் தெரியும். டோனிக்கு சப்போர்ட் ஆக விளையாடினால் போதுமானது என்று நினைத்தேன். அதை மனதில் வைத்துதான் விளையாட முயற்சி செய்தேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com