காஷ்மீர் பள்ளிக்கு திடீர் வருகை தந்த தோனி: மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ பள்ளிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி திடீரென வருகை தந்து மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
காஷ்மீர் பள்ளிக்கு திடீர் வருகை தந்த தோனி: மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
Published on

ஸ்ரீநகர்:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தற்போது ஓய்வில் உள்ளார். அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் தோனி சிறப்பாக விளையாடியுள்ளார். அவரை கவுரப்படுத்தும் வகையில் ராணுவ லெப்டினெண்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள ராணுவ பள்ளிக்கு மகேந்திர சிங் தோனி நேற்று திடீரென சென்றார். அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களிடம் கலந்துரையாடினார்.

அப்போது அவர், மாணவர்கள் கல்வியில் ஈடுபாடு காட்டுவது போல், விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்திய அணியில் சிறந்து விளங்கும் மகேந்திரசிங் தோனியை கண்டதும் மாணவர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com