தருமபுரி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு

தருமபுரி மாவட்டம் அரூரியில் இருந்து பொம்மிடிக்கு புறப்பட்ட அரசு பஸ் மீது மர்மநபர்கள் கல்வீசியதில் பின்பக்க கண்ணாடி உடைந்தது.
தருமபுரி அருகே அரசு பஸ் மீது கல்வீசி கண்ணாடி உடைப்பு
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம் அரூரில் இருந்து பொம்மிடிக்கு நேற்று இரவு அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது.

இரவு நேரம் என்பதால் அந்த பஸ்சை அங்கேயே நிறுத்தி விட்டு இன்று அதிகாலையில் மீண்டும் இயக்கினர். பஸ்சை டிரைவர் ஞானசேகரன் என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் துரை என்பவர் கண்டக்டராக இருந்தார். 3 பயணிகளுடன் பொம்மிடியில் இருந்து பஸ் புறப்பட்டது.

அப்போது பொம்மிடி அருகே பி.பள்ளி பட்டி என்ற இடத்தில் வந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் திடீரென்று கல்லை எடுத்து பஸ்சின் மீது வீசினர். இதில் பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. இந்த சம்பவம் குறித்து பொம்மிடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com