வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கிகள்

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை காப்புக்காடு பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த நாட்டுத் துப்பாக்கிகள்
Published on

ஏரியூர்:

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள அஜ்ஜன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை காப்புக்காடு பகுதியில் 5 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஏரியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவில் நாட்டு துப்பாக்கிகள் இருப்பதாக ரகசிய தகவல் வந்ததன்பேரில், மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில், நாட்டு துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும், நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஏரியூர் வனப் பகுதியில் மர்ம நபர்கள் 5 நாட்டு துப்பாக்கிகளை வீசிச் சென்றுள்ளனர். நாட்டு துப்பாக்கிகளை வீசிச்சென்ற மர்ம நபர்கள் யார் என்கிற ரீதியில் ஏரியூர் போலீசார் புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

ஏரியூர் வனப்பகுதியில் 5 நாட்டு துப்பாக்கிகள் வீசிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com