தர்மபுரி அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு

தர்மபுரி அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கொள்ளை
வீடு புகுந்து கொள்ளை
Published on

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள எட்டிமரத்துப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். விவசாயியான இவர் வீட்டை பூட்டி விட்டு தோட்டத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாதையன் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

அப்போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com