தர்மபுரி அருகே அ.தி.மு.க. பிரமுகர் திடீர் மரணம்

தர்மபுரி அருகே சிகிச்சி பலனின்றி மரணமடைந்த அ.தி.முக. பிரமுகர் குறித்து மதிகோண்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி அருகே அ.தி.மு.க. பிரமுகர் திடீர் மரணம்
Published on

தர்மபுரி:

தர்மபுரி அருகே செல்லியம்பட்டி பகுதியில் உள்ள பள்ளி முன்பு 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இவர் அ.தி.மு.க. கரைவேஷ்டி கட்டி இருந்தார். ஆனால் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என எந்த விபரமும் தெரியவில்லை.

பொதுமக்கள் மற்றும் மதிகோண்பாளையம் போலீசார் அங்கு வந்து முதியவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com